Thursday, November 11, 2010

சாம்பார் பொடி மற்றும் அரைத்து விட்ட குழம்பு

சாம்பார் பொடி:

கொத்தமல்லி விதை (தனியா) - 250g
துவரம் பருப்பு - 50g
கடலை பருப்பு - 50g
சிவப்பு மிளகாய் வற்றல் (நன்கு காயவைத்தது) - 200 g
வெந்தயம் - 10 g
கொத்தமல்லி வெந்தயம் இரண்டையும் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
மற்றவைகள் நன்கு காய்ந்து இருக்கவேண்டும்.
மாவு திரிக்கும் மிசினில் கொடுத்து திரித்துக் கொள்ளவும்.
நல்ல மிக்சியில் கூட திரித்துக் கொள்ளலாம்.

அரைத்து விட்ட குழம்பு:

கொஞ்சமாக எண்ணெய் எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வறுத்துக் கொண்டு (same proportion ) அதனுடன் வெறும் 1-2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து 'பர பர' வென அரைத்துக் கொள்ளவும். ஒரு இழுப்பவானளியில் காய்களை (சதுரமாக நறுக்கிய உருளை, கத்திரிக்காய், அவரைக்காய், நீளமாக நறுக்கிய காரட் ) சற்று வதக்கி புளித் தண்ணீர் விட்டு (salt) நன்கு கொதித்தவுடன் (புளியின் பச்சை வாசனை போன பின் , add asafetida powder ) இந்த அரைத்த விழுதை அதன் தலையில் கொட்டி (நிறைய நேரம் கொதிக்கக் கூடாது ; தேங்காய் கொதித்தால் எண்ணெய் விட்டு taste மாறிவிடும்; சாம்பார் பொடியின் பச்சை வாசனை இருக்காது - வறுத்து விடுவதால்) ஒரு கொதி வந்தவுடன் பருப்பு சேர்த்து வழக்கம் போல அரிசி மாவு (கால் ஸ்பூன்) கரைத்து விட்டு இறக்கினால் .... அரைத்து விட்ட குழம்பு ரெடி!!

Monday, November 8, 2010

எரிசேரி



இது ஒரு டிபிகல் பிராமின் பதார்த்தம். பெயர்க் காரணம் பின்னர் தெரிவிக்கப் படும்.

சுமார் 10 மிளகுடன் கால் மூடி தேங்காய் துருவல் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். இதில் ஒரு அரை கப் தண்ணீர் விட்டுக் கொள்ளுங்கள்.

வாழைக்காய் (2) மற்றும் சேனை கிழங்கு (1/4 Kg) இதன் main ingredients. இரண்டையும் சதுரமாக வெட்டிக் கொண்டு ஒரு பிரஷர் cooker இல் கீழே சேனையையும் மேலே வாழைக்காய் ஐயும் வைத்து அரைத்த விழுதை (நீர்க்க) அதில் விட்டு கொள்ளவேண்டியது. இதிலே உப்பு ஒரு டீ ஸ்பூன் (தேவை இருந்தால் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்). கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் காய் கலர் மாறாது. ஒரு விசில் விடவும். விசில் வந்தவுடன் cooker ஐ அனைத்து விசிலை மேலே தூக்கிவிட்டு பிரஷர் ஐ ரிலீஸ் செய்து விட வேண்டும். இல்லையென்றால் காய் குழைந்து விடும், அது ஸரி அல்ல.

cooker ஐ ஓபன் செய்து கொஞ்சம் பெருங்காயம் போட்டு ஒருமுறை கிளறிவிடுங்கள். நன்றாக வாசனை வரும்.

ஒரு இழுப்பவானளியில் தேங்காய் எண்ணையில் கருவேப்பிலையை வறுத்துக்கொள்ளவும். அதிலேயே அரை மூடி (தேவையான அளவு) தேங்காய் துருவலைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். தேங்காய் சற்று செந்நிறமாக வந்தவுடன் cooker இல் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

To get a closer look on the size of the vegetables click on the photo.

Friday, September 17, 2010

வெள்ளரிக்காய் பச்சடி

வெள்ளரிக்காயை தோல் சீவி நடுவில் உள்ள விதை பாகத்தை எடுத்துவிடுங்கள். மிச்சம் இருப்பது வெள்ளரியின் சதை மட்டுமே. சிறு துண்டுகளாக அதை வெட்டிக் கொண்டு மிக்சியில் ஓரிரு திருப்பிக் கொள்ளுங்கள். மிக்சி இல்லாதவர்கள் கத்தியால் அல்லது மற்ற சன்னமாகத் திருகும் சாமான்கள் மூலம் துருவிக் கொள்ளுங்கள். இதனுடன் உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் வெள்ளரியில் உள்ள தண்ணீர் வெளியேறிவிடும். பின்னர் அதனை வடித்துவிடவோ அல்லது விட்டுவிடவோ வசதி இருக்கும். பச்சடி நீராக ஓடாமல் இருக்கும்.

இரண்டு தக்காளி, கொஞ்சம் ஜீரகம், ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவல் இவற்றையும் அரை கப் தயிரில் அரைத்துக் கொண்டு வெள்ளரிக்காயுடன் சேர்த்துக்கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கால் ஸ்பூன் எண்ணையில் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் கொண்டு கடைசியில் கொஞ்சம் பெருங்காயம் போட்டு பச்சடியின் தலையில் சேர்க்கவும்.

கொத்தமல்லி இலைகள் இருப்பின் மிக சன்னமாக அதை அறிந்து, அழகு மற்றும் வாசனைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதார்த்தம் எடுத்துக் கொள்ளும் நேரம் இரண்டில் இருந்து மூன்று நிமிடங்கள் தான்.
Try once.

Summary :
chopped வெள்ளரி + உப்பு +
mixer of தேங்காய் துருவல் , ஜீரகம், பச்சை மிளகாய் , தக்காளி and curd
+ தாளிப்பு = வெள்ளரிப் பச்சடி.

Thursday, August 19, 2010

சாம்பார் பொடி

இந்த போஸ்ட் இல் சாம்பார் பொடி எப்படி திரிப்பது என்பதை என் அம்மாவிடம் கேட்டு எழுதுகிறேன். கொஞ்சம் சுலபமாக புரிவதற்க்கேற்றார்ப் போல் தேவையான பொருள்களின் படத்தையும் போடப் போகிறேன்.

Wednesday, August 18, 2010

பதஞ்சலி என்ன சொன்னார்?

http://anmikam4dumbme.blogspot.com/2010/09/blog-post_06.html


*******************************************
http://anmikam4dumbme.blogspot.com/2010/09/blog-post.html
ஞாபகம் இருகிறதா?
*******************************************
ஒரு விண்ணப்பம்:
--------------------------

சில நண்பர்கள் (பழைய , தற்போதய) கருத்துக்கள் மெயில் மூலமாகத் தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. முடிந்தால் உபயோகமான கருத்துக்கள் தெரிவிப்பது நலம். கனி இருப்பக் காய் கவர்தல் எதற்கு?

அப்படி உங்கள் கருத்துக்கள் உங்களுக்காவது உபயோகமாகப் பட்டால்,அந்த பயனை மற்றவர்களுக்கும் கொடுங்கள் , என் ப்ளாக் இல் அந்த கருத்துக்களை இடுங்கள். 'அபய த்யானம்' கூட்டம் மட்டும் அதை அனுபவிப்பது முறையாகாது.

சரிதானே?




http://anmikam4dumbme.blogspot.com/2010/08/blog-post_24.html
படிங்க but அமைதியா. ஆர்ப்பாட்டமா கமெண்ட் போடவேண்டாம்.

Thanks to Satya, the only guy talked to me over chat/mail/phone on the previous post (the below one).

நன்றி.


http://anmikam4dumbme.blogspot.com/

எத்தனை பேர் இந்த லிங்க் follow பன்னுறேள்னு தெரியல. உங்கள் தியான அறிவை வளர்த்துக்கவேனும்னா கொஞ்சம் பாருங்கள்.
கிழே உள்ள லிங்கில் நம்மைப் (த்யானத்தில் நம் நிலை) பற்றிய சில உண்மைகள் தெரிய வரும். என்னுடைய கமெண்ட் பார்த்தால் அது evident ஆகும்.
http://anmikam4dumbme.blogspot.com/2010/08/blog-post_18.html

நன்றி.

Tuesday, August 17, 2010

பூசணிக்காய் சாம்பார்

புளி :
எப்படி பார்த்து வாங்கனும்ங்க்றது எல்லாம் போன போஸ்ட்-லையே சொல்லி ஆச்சு. அப்படிப்பட்ட புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு (இப்படி ஒரு உவமை தரவில்லையெனில், நளன் சந்ததி என்னை கோவித்துக் கொள்ளும்), எடுத்து ஊற வைத்துக்க வேண்டியது.

தான் + உப்பு :
தான் போடாமல் சாம்பாரோ, வற்றல் குழம்போ செய்யக்கூடாது. ஏன்? உங்கள் ஊர் நூற்றுக் கிழவியிடம் போய் கேட்டுக்கொள்ளுங்கள். வெண்டைக்காய், பீன்ஸ், உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு அது இதுவென எத்தனைக் காய்கள் இருந்தாலும் நாம இப்போ பார்க்க போறது "சர்க்கரை பூசணிக்காய்" aka "மஞ்சள் பூசணிக்காய்" சாம்பார் தான்.why? இது தான் இந்த போஸ்ட் question.

வழக்கம் போல் கொஞ்சமாக வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு வெந்தயம்(optional) தாளித்து சர்க்கரை பூசணிக்காயை போடலாமென்றால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. நம் 'தான்' கொஞ்சம் நல்ல நீரை absorb பண்ணக் கூடிய பொருள். சட்டென காரம் மற்றும் உப்பை இழுத்துக் கொண்டுவிடும். "நான் நிறைய தானே போட்டேன் ...பத்தலையே.." என்று குழப்பி விடும். இதற்கு ரெண்டு solution இருக்கிறது.
1 . உப்பு காரம் போடும் முன்னர், தாளித்த பின், எண்ணையில் 'தான்' சற்று வதங்கியவுடன் புளித் தண்ணீரை மட்டும் விட்டு கொதிக்க விடுதல் (வெள்ளை பூசணிக்காய் புளியில் வேகாது). சற்று நேரத்தில் புளித் தண்ணீர் absorb ஆன வுடன் "தான்" saturate ஆகிவிடும், அதன் பின் உப்போ காரமோ பெருமளவு இழுக்காது.
2 . "மீனாட்சி அம்மாள்" என்பவர் சமையல் புஸ்தகத்தில் மிகவும் பரிச்சயம். அவர், ஒரு சின்ன பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்துக் கொண்டு அதில் சற்று உப்பு போட்டு கரைந்த பின் அதில் இந்த "தான்" துண்டுகளை போட்டு மூடி வைத்துக் கொள்ள சொல்லுகிறார். இதனால் again "தான்" saturate ஆகிவிடும். இந்த முறை உப்பினால்.

பச்சை மிளகாய் + சாம்பார் பொடி:
bright yellow கலரில் இருந்து சற்று dark ஆன yellow கலர்க்கு "தான்" மாறியபின் , தற்பொழுது சற்று sponge போல தன்மை பெற்று விடும். இதற்கெல்லாம் ஒரு 3 முதல் 4 நிமிடங்கள் தான் ஆகும். இப்பொழுது இதன் மேல் உப்பு, குழம்புப் பொடி போடவேண்டும். In general நான் 1.5 ஸ்பூன் போடுவேன். இதோடு 2 அல்லது 3 பச்சை மிளகாய் நடுவில் கீறி போடுவதால் காரம் கிடைக்கும் (வற்றல் குழம்பு காரத்துக்கும் சாம்பாரின் காரத்துக்கும் இது தான் difference. எதற்கு? யோசித்து வையுங்கள் போஸ்ட் இன் முடிவில் பதில் உண்டு). இதை நன்றாக சற்று வேகமாக, intense ஆகக் கொதிக்க விடவேண்டும். இந்த step-உம் வற்றல் குழம்பிலிருந்து மாறு படுகிறது. ஏன்? போன கேள்வியின் பதிலே இதற்கும் ஒரு வழியில் பொருந்தும்.
ஒரு 10 நிமிஷம் கொதித்த பின், நன்றாக thickness generate ஆகி விடும். இப்பொழுது தேவையான அளவு (closely releated to the புளி and காரம் ) தண்ணீர் விட்டுக் கொள்ளவும். மறுபடியும் கொதிக்க விடவேண்டும்.
இப்பொழுது சற்று குழம்பு வாசனை வர ஆரம்பித்து விடும். பச்சை புளி மற்றும் காரத்தின் taste உம் போய் விடும்.

பருப்பு:
"Time, quality and cost. Pick any two "
பருப்பு ஸரி ஆக இல்லேன்னா நல்ல மணமான சாம்பாருக்கு சங்கு தான். குழம்பு பாத்திரம் அடுப்பில் ஏற்றுவதற்கு முன்னர் பருப்பு ரெடி ஆகிவிட வேண்டும். பருப்பை cooker இல் வேக வைக்கும் முன் சற்று நல்லெண்ணெய், துளி உப்பு மற்றும் துளி மஞ்சள் பொடி சேர்க்க வேண்டும். வேக வைத்த பின் பருப்பு "இழை இழை யாக " இருத்தல் வேண்டும். இது standard. (winner : இது டைமிங் )
இப்படியாப்பட்ட பருப்பை குழம்பின் தலையில் சேர்த்தால் வாசனை இல்லா சாம்பார் ரெடி.

வாசனை:
பெருங்காயம் போடவேண்டும். அப்பொழுது தான் வாசனை வரும். அதுவரை ...ம்ம்ஹும் ....
மிக பரிச்சயமாக இருக்கும் பெருங்காயங்கள் எல்லாம் mostly fillers தான் நிறைய அதனால் SSP நு ஒரு brand பெங்களூர் இல் கிடைக்கிறது. "ஸ்வல்ப காட்டம் ஜாஸ்தி மகா" so பார்த்து உபயோகிக்கவும்.

thickness:
புளி கரைத்த அந்த பாத்திரத்தில் (சற்று கழுவிய பின் ) ஒரு சின்ன குழிக் கரண்டி அளவு அரிசி மாவை கொஞ்சமான நீரில் கரைத்து குழம்பின் தலையில் கொட்டவும். ஒரு கொதி வந்தவுடன், சுபம்.

Consolidation :
தான் + புளி + உப்பு + சாம்பார் பொடி + மிளகாய் = குழம்பு
குழம்பு + பருப்பு = பருப்புக் குழம்பு
பருப்புக் குழம்பு + பெருங்காயம் = வாசனையான பருப்புக் குழம்பு

## இன் perl வே
if (தான் == "சர்க்கரை பூசணிக்காய்") {
print "$1 \n " ;
}

>> பூசணிக்காய் சாம்பார்
>>

question 1 answer : வற்றல் Vs பச்சை மிளகாய் - வற்றல் வெயிலில் காய வைத்து திரிப்பதனால் மிதமான மற்றும் மணமான காரம் பெற்று விடும். பச்சை மிளகாய் அப்படியே நேரெதிர். வரட்டுக் காரம். மிதமான காரம் பருப்பில் எடு படாது.
question 2 answer : வேகமாக கொதிக்க வைப்பதால் வரட்டுக் காரம் சட்டென்று குழம்புடன் சேர்ந்து விடும். மாறாக வற்றல் குழம்பில் மணம் மிகவும் முக்கியம். வேகமான கொதி மணத்திற்கு எதிரி.

அடுத்த போஸ்ட்

ஆள் இல்லாத tea கடை என முடிவான பிறகும் எழுதுகிறேன். Because it's my debris. அடுத்த போஸ்ட் சாம்பார் அதன் பின் ஒரு கூட்டு . Parallel ஆக ஒரு பாட்டு பற்றி என்னுடைய உளறல்கள்.

Tuesday, July 20, 2010

குரு நான் மற்றும் வத்தக்குழம்பு

சென்ற வாரம் ஒரு நாள் சில மணி நேரம் எனது குரு என்னகத்துக்கு வந்திருந்தார். என்னகத்துக்காரி அகத்தில் இல்லாததால் தான் சமைப்பதாகச் சொன்னார். ரசம் ஒரு கறிகாய் என ஆரம்பித்து நான் வத்தக் குழம்பில் முடித்தேன். இனி உரையாடலாக....

குரு : ஆம்பள (ஐகாரக்குறுக்கம்) சமயல்ங்க்றது சரியாதான் இருக்கு ... பாத்திரம் கழுவாம இருக்கு பார்...
நான் : வெறும் மூன்று பாத்திரங்கள் தானே இருக்கு ...
குரு : புளி எடு. எங்கே புளி வாங்குற ?
நான் : இங்கே பக்கத்துல இருக்கிற கடையில் தான்.
குரு : மசாலா... தும்கூர் பக்கதுல தான இருக்கு? மார்க்கெட் போனா ரொம்ப சௌகரியமான விலைல வாங்கலாம்.
நான் : எப்படி பார்த்து வாங்குறது?
குரு : நல்ல அகலமா திக்கா இருக்கும். கொட்டை இருக்காது.
நான் : பழசா போனா நன்னா இருக்குமா?
அதெல்லாம் நன்னா தான் இருக்கும்.
ஸரி, ஒரு சில வாரங்களில் போய் வாங்குறேன்.
Summer முடியறதுக்கு முன்னாடி போய் வாங்க வேண்டும்.
ஒரு பாத்திரம் கொடு..புளிய (மறுபடியும் ஐகாரக்குறுக்கம்) ஊற வைக்கனும்
<நான் ஒரு பாத்திரம் கொடுக்கிறேன் >
இது பால் பாத்திரம் இல்லையே ?
ஹி..ஹி.. இது பால் பாத்திரம் தான் ..
அதுக்கு தான் கேட்டேன் ... வேற கொடு.
புளி கரைபதுல கூட chemistry வருது பார்... extraction of solvent . ஒரே தடவையா தண்ணிய விடக் கூடாது.. .கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும்
--Hereafter the core topic demonstration--
புளி கொஞ்சம் உள்ளங்கையில் எடுத்து அதை அமுக்கி உருட்டினால் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு இருக்க வேண்டும்.
நல்ல தண்ணீரில் புளியை ஊறவைக்கவேண்டும் .
தண்ணீர் சூடா இருந்தா சட்டென புளி இழகும் கரைக்க (extraction of solvent) இலகுவா இருக்கும். கொஞ்சம் கூட வேஸ்ட் செய்யக்கூடாது.
ஒரு சின்ன பாத்திரம் எடுத்து அதுல நல்லெண்ணெய் விட்டு (சற்று அதிகமாவே ) கடுகு, விரல் நுனி பிடிக்கும் அளவு வெந்தயம், போட்டு வெடித்தவுடன்,
தேவையான அளவு (20 - 30 ) சுண்டைக்காய் வற்றல், 5 - 6 மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.....
வதக்குறது ரொம்ப முக்கியமான-step ரொம்ப கருகவும் விடக்கூடாது அதே சமயம் சரியா வதக்கலேன்னா சுண்டைக்காய் கசக்கும் .... குழம்பின் மணமும் கெட்டுப்போகும்.
இப்போ அது தலைல புளித்தண்ணிய விட்டு ... ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்சம் கொஞ்சமா தண்ணிய விட்டு புளிய கரைக்கணும். சற்று கொதித்த பின் (2 minutes ) சாம்பார் பொடி 1 ஸ்பூன் (வீட்டில் அரைத்தது விசேஷம் , காரம் உங்கள் பொடியை பொறுத்து அளவு மாறும்) சேர்த்து , மூன்று விரல் சேர்த்து 2 ஆம் கோடு வரை கல் உப்பு எடுத்து சேர்க்கவேண்டும். கொஞ்சம் மஞ்சள் பொடி (ஒரு விரல் நுனி அளவு ) சேர்ப்பது உங்கள் விருப்பம். அடுப்பை மெல்லிதாக சூட்டில் வைக்கவும், வேகமாக வைத்தால் pre-matured ஆக evaporate ஆகிவிடும் , மெதுவா கொதிக்கும் போதுதான் சுவையும் மணமும் அதிகமாகும். குழம்பு கொதிக்கும் வாசனை இப்பொழுதே வந்திருக்கும்.. சுவை பார்த்து உப்பு and or தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அடிப்படையா பச்சை புளி வாசனை இருக்கக்கூடாது, வறட்டு சாம்பார் பொடி காரமும் இருக்கக்கூடாது.

இன்னும் கொஞ்ச நேரம் கொதிக்கவிட்ட பின் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசி மாவை கால் டம்பளர் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்ளவும் ...
இந்நேரம் மெல்லிதான சூடினால் குழம்பு நுரை போல பரவலாக கொதித்துக்கொண்டிருக்கும்... இப்பொழுது அதன் தலையில் அரை டீஸ்பூன் பெருங்காயம் கொட்டி, ஒரு கொதி விட்டு , ஒரு சின்ன வெல்லக்கட்டி (மண்டை வெல்லம்) பொடி செய்து போட்டு 15 - 30 seconds கொதிக்க வைத்து சற்று முன்னர் கரைத்த அரிசி மாவை சேர்த்தால் .... வற்றல் குழம்பு ரெடி !!!!

என் தமக்கை அரிசி மாவை விட்ட பின் ஒரு கொதி விடுவார்...

இதில் இரண்டு விசயங்களை மறைத்து விட்டேன் .... அது ரகசியம் ஆனால் அது extra தான் basic இல்லை :) :)
நல்ல மழை பெய்யும் பொழுது வற்றல் குழம்பு சாதம் , துணைக்கு தேங்காய் எண்ணெயில் பொறித்த வடாம் ....
<நான் எங்கே இருக்கேன் ...அட மெய் மறக்கிற combination நு சொன்னேன் ... ஒரு உப்பிட்ட நார்த்தங்காய் துண்டு ... அடடா ....>

இந்த ப்ளாக் பற்றி அம்மாவிடம் பேசிகொண்டிருந்த பொழுது அவர் சில தகவல் தந்தார்.
* முடிவில் ஒரு ஸ்பூன் தேன் விடுதல்.
* சாம்பார் பொடியை புளி விடும் முன்னர் கடுகு தாளிக்கும் பொழுது 3 - 4 செகண்ட்ஸ் வருத்துக் கொள்ளவேண்டும். (கவனம் சாம்பார் பொடி கருகும் வாய்ப்பு உள்ளதால் இதை சற்று பழக்கம் வந்த பின் முயற்சித்தல் ஷேமம்.)

இந்த ப்ளாக் ஐ எத்துனை பேர் படிக்கிறார்கள் என தெரியவில்லை. இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் வத்தக் குழம்பிற்கு ஏற்ற சில பதார்த்தங்களை பின் வரும் போஸ்டில் தெரிவிக்கிறேன் எனக் கூறி அமைகிறேன். (இப்படி எழுதுவதில் என்ன பிழை இருக்கிறது எனச் சொன்னால் அடுத்த போஸ்ட் ரெடி :) )

Sunday, June 6, 2010

யோகாசனங்கள்

இப்பிரிவானது முக்கியமான (நான் கற்றுக்கொண்ட, படித்த) சில யோகாசனங்களின் செய்முறை மற்றும் இதர தகவல்களை தாங்கி நிற்கும்.
இது வெறும் தகவல் மட்டுமே. ஏற்கனவே முறைப்படி யோகா கற்றுகொண்டுள்ளவர்களுக்கு மட்டும்.
Paschimottaanaasana:
'பஸ்சிம' என்றால் 'மேற்கு' என்று அர்த்தம். கிழக்கு நோக்கி இருக்கும்போது உடம்பின் பின்புறம் மேற்கு என்றாகிறது. உடம்பின் பின்புறத்தை (மேற்கை :) ) முன் நோக்கி வளைப்பதனால் இந்த ஆசனத்திற்கு இந்த பெயர்.இந்த ஆசனத்திற்கு 'உக்ராசனா' அல்லது 'பிரமச்சர்யாசனா' என்ற பெயர்களும் உண்டு. பெயருக்கேற்றபடி பலன்கள் இருக்குமென்பதால் இந்த பெயர்கள் என ஐயங்கார் தெரிவிக்கிறார்.
* Sit on the floor with legs stretched.
* From hip to the head to be in perpendicular to the floor (leg)
* Take a deep breath before relax your breath.



* Exhale, clamp your toe with your hands.
* Pull the stomach a bit inward (arrow in the figure).
* Bent your hip-shoulder to the front while just pulling the head back through the neck.
* Relax here till the breath is normalized.

* Exhale again, widen your elbows so that your hip-head can lean to the front.
* Stay in this position for 10-15 seconds.

* Slowly move back to the position 1.
* May repeat this one more time.
NOTE : கால் முட்டிகள் மேல்நோக்கி வளைவது தவறு !!!