Tuesday, August 17, 2010

பூசணிக்காய் சாம்பார்

புளி :
எப்படி பார்த்து வாங்கனும்ங்க்றது எல்லாம் போன போஸ்ட்-லையே சொல்லி ஆச்சு. அப்படிப்பட்ட புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு (இப்படி ஒரு உவமை தரவில்லையெனில், நளன் சந்ததி என்னை கோவித்துக் கொள்ளும்), எடுத்து ஊற வைத்துக்க வேண்டியது.

தான் + உப்பு :
தான் போடாமல் சாம்பாரோ, வற்றல் குழம்போ செய்யக்கூடாது. ஏன்? உங்கள் ஊர் நூற்றுக் கிழவியிடம் போய் கேட்டுக்கொள்ளுங்கள். வெண்டைக்காய், பீன்ஸ், உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு அது இதுவென எத்தனைக் காய்கள் இருந்தாலும் நாம இப்போ பார்க்க போறது "சர்க்கரை பூசணிக்காய்" aka "மஞ்சள் பூசணிக்காய்" சாம்பார் தான்.why? இது தான் இந்த போஸ்ட் question.

வழக்கம் போல் கொஞ்சமாக வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு வெந்தயம்(optional) தாளித்து சர்க்கரை பூசணிக்காயை போடலாமென்றால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. நம் 'தான்' கொஞ்சம் நல்ல நீரை absorb பண்ணக் கூடிய பொருள். சட்டென காரம் மற்றும் உப்பை இழுத்துக் கொண்டுவிடும். "நான் நிறைய தானே போட்டேன் ...பத்தலையே.." என்று குழப்பி விடும். இதற்கு ரெண்டு solution இருக்கிறது.
1 . உப்பு காரம் போடும் முன்னர், தாளித்த பின், எண்ணையில் 'தான்' சற்று வதங்கியவுடன் புளித் தண்ணீரை மட்டும் விட்டு கொதிக்க விடுதல் (வெள்ளை பூசணிக்காய் புளியில் வேகாது). சற்று நேரத்தில் புளித் தண்ணீர் absorb ஆன வுடன் "தான்" saturate ஆகிவிடும், அதன் பின் உப்போ காரமோ பெருமளவு இழுக்காது.
2 . "மீனாட்சி அம்மாள்" என்பவர் சமையல் புஸ்தகத்தில் மிகவும் பரிச்சயம். அவர், ஒரு சின்ன பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்துக் கொண்டு அதில் சற்று உப்பு போட்டு கரைந்த பின் அதில் இந்த "தான்" துண்டுகளை போட்டு மூடி வைத்துக் கொள்ள சொல்லுகிறார். இதனால் again "தான்" saturate ஆகிவிடும். இந்த முறை உப்பினால்.

பச்சை மிளகாய் + சாம்பார் பொடி:
bright yellow கலரில் இருந்து சற்று dark ஆன yellow கலர்க்கு "தான்" மாறியபின் , தற்பொழுது சற்று sponge போல தன்மை பெற்று விடும். இதற்கெல்லாம் ஒரு 3 முதல் 4 நிமிடங்கள் தான் ஆகும். இப்பொழுது இதன் மேல் உப்பு, குழம்புப் பொடி போடவேண்டும். In general நான் 1.5 ஸ்பூன் போடுவேன். இதோடு 2 அல்லது 3 பச்சை மிளகாய் நடுவில் கீறி போடுவதால் காரம் கிடைக்கும் (வற்றல் குழம்பு காரத்துக்கும் சாம்பாரின் காரத்துக்கும் இது தான் difference. எதற்கு? யோசித்து வையுங்கள் போஸ்ட் இன் முடிவில் பதில் உண்டு). இதை நன்றாக சற்று வேகமாக, intense ஆகக் கொதிக்க விடவேண்டும். இந்த step-உம் வற்றல் குழம்பிலிருந்து மாறு படுகிறது. ஏன்? போன கேள்வியின் பதிலே இதற்கும் ஒரு வழியில் பொருந்தும்.
ஒரு 10 நிமிஷம் கொதித்த பின், நன்றாக thickness generate ஆகி விடும். இப்பொழுது தேவையான அளவு (closely releated to the புளி and காரம் ) தண்ணீர் விட்டுக் கொள்ளவும். மறுபடியும் கொதிக்க விடவேண்டும்.
இப்பொழுது சற்று குழம்பு வாசனை வர ஆரம்பித்து விடும். பச்சை புளி மற்றும் காரத்தின் taste உம் போய் விடும்.

பருப்பு:
"Time, quality and cost. Pick any two "
பருப்பு ஸரி ஆக இல்லேன்னா நல்ல மணமான சாம்பாருக்கு சங்கு தான். குழம்பு பாத்திரம் அடுப்பில் ஏற்றுவதற்கு முன்னர் பருப்பு ரெடி ஆகிவிட வேண்டும். பருப்பை cooker இல் வேக வைக்கும் முன் சற்று நல்லெண்ணெய், துளி உப்பு மற்றும் துளி மஞ்சள் பொடி சேர்க்க வேண்டும். வேக வைத்த பின் பருப்பு "இழை இழை யாக " இருத்தல் வேண்டும். இது standard. (winner : இது டைமிங் )
இப்படியாப்பட்ட பருப்பை குழம்பின் தலையில் சேர்த்தால் வாசனை இல்லா சாம்பார் ரெடி.

வாசனை:
பெருங்காயம் போடவேண்டும். அப்பொழுது தான் வாசனை வரும். அதுவரை ...ம்ம்ஹும் ....
மிக பரிச்சயமாக இருக்கும் பெருங்காயங்கள் எல்லாம் mostly fillers தான் நிறைய அதனால் SSP நு ஒரு brand பெங்களூர் இல் கிடைக்கிறது. "ஸ்வல்ப காட்டம் ஜாஸ்தி மகா" so பார்த்து உபயோகிக்கவும்.

thickness:
புளி கரைத்த அந்த பாத்திரத்தில் (சற்று கழுவிய பின் ) ஒரு சின்ன குழிக் கரண்டி அளவு அரிசி மாவை கொஞ்சமான நீரில் கரைத்து குழம்பின் தலையில் கொட்டவும். ஒரு கொதி வந்தவுடன், சுபம்.

Consolidation :
தான் + புளி + உப்பு + சாம்பார் பொடி + மிளகாய் = குழம்பு
குழம்பு + பருப்பு = பருப்புக் குழம்பு
பருப்புக் குழம்பு + பெருங்காயம் = வாசனையான பருப்புக் குழம்பு

## இன் perl வே
if (தான் == "சர்க்கரை பூசணிக்காய்") {
print "$1 \n " ;
}

>> பூசணிக்காய் சாம்பார்
>>

question 1 answer : வற்றல் Vs பச்சை மிளகாய் - வற்றல் வெயிலில் காய வைத்து திரிப்பதனால் மிதமான மற்றும் மணமான காரம் பெற்று விடும். பச்சை மிளகாய் அப்படியே நேரெதிர். வரட்டுக் காரம். மிதமான காரம் பருப்பில் எடு படாது.
question 2 answer : வேகமாக கொதிக்க வைப்பதால் வரட்டுக் காரம் சட்டென்று குழம்புடன் சேர்ந்து விடும். மாறாக வற்றல் குழம்பில் மணம் மிகவும் முக்கியம். வேகமான கொதி மணத்திற்கு எதிரி.

2 comments:

  1. வெண்டைக்காய், பீன்ஸ், உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு அது இதுவென எத்தனைக் காய்கள் இருந்தாலும் நாம இப்போ பார்க்க போறது "சர்க்கரை பூசணிக்காய்" aka "மஞ்சள் பூசணிக்காய்" சாம்பார் தான்.why?

    வாசனை. நல்ல முருங்கைக்காய் சாம்பாரை விட consistent ஆக வாசனை கொடுப்பது சர்க்கரை பூசணிக்காய் தாம்.

    ReplyDelete
  2. நீங்களே போஸ்ட் போட்டு நீங்களே கமெண்டி இருக்கீங்களா? ஓகே, ஓகே, சாம்பாரோ, வற்றல் குழம்போ மாவு விட்டால் ஒரிஜினல் சுவை போய் விடும், சாம்பாரில் தான்களைச் சேர்த்துக் கொதி வந்ததும் பருப்புச் சேர்த்து ஒரு கொதி வந்தாலே சேர்ந்துவிடும். அரைத்துவிட்ட சாம்பார் என்றால் கேட்கவே வேண்டாம்.

    வற்றல் குழம்புக்குத் தான் போடமாட்டாங்க. வற்றல்கள் மட்டுமே போடுவதே வற்றல் குழம்பு. அவரை, கொத்தவரை, கத்திரிக்காய் வற்றல்கள், சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல், மிதுக்க வற்றல் போன்றவை போட்டால் தான் வற்றல் குழம்பு.

    மறந்துட்டேனே, எரிசேரிக்குப் பெருங்காயம் சேர்க்கக் கூடாது. அங்கேயே சொல்ல மறந்துட்டேன். இப்போத் தான் நினைப்பு வந்தது. :)))))))

    ReplyDelete