Monday, November 8, 2010
எரிசேரி
இது ஒரு டிபிகல் பிராமின் பதார்த்தம். பெயர்க் காரணம் பின்னர் தெரிவிக்கப் படும்.
சுமார் 10 மிளகுடன் கால் மூடி தேங்காய் துருவல் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். இதில் ஒரு அரை கப் தண்ணீர் விட்டுக் கொள்ளுங்கள்.
வாழைக்காய் (2) மற்றும் சேனை கிழங்கு (1/4 Kg) இதன் main ingredients. இரண்டையும் சதுரமாக வெட்டிக் கொண்டு ஒரு பிரஷர் cooker இல் கீழே சேனையையும் மேலே வாழைக்காய் ஐயும் வைத்து அரைத்த விழுதை (நீர்க்க) அதில் விட்டு கொள்ளவேண்டியது. இதிலே உப்பு ஒரு டீ ஸ்பூன் (தேவை இருந்தால் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்). கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் காய் கலர் மாறாது. ஒரு விசில் விடவும். விசில் வந்தவுடன் cooker ஐ அனைத்து விசிலை மேலே தூக்கிவிட்டு பிரஷர் ஐ ரிலீஸ் செய்து விட வேண்டும். இல்லையென்றால் காய் குழைந்து விடும், அது ஸரி அல்ல.
cooker ஐ ஓபன் செய்து கொஞ்சம் பெருங்காயம் போட்டு ஒருமுறை கிளறிவிடுங்கள். நன்றாக வாசனை வரும்.
ஒரு இழுப்பவானளியில் தேங்காய் எண்ணையில் கருவேப்பிலையை வறுத்துக்கொள்ளவும். அதிலேயே அரை மூடி (தேவையான அளவு) தேங்காய் துருவலைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். தேங்காய் சற்று செந்நிறமாக வந்தவுடன் cooker இல் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
To get a closer look on the size of the vegetables click on the photo.
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி மாம்ஸ் :)
ReplyDeleteA comment through mail.
ReplyDeleteswami,
enakku engayo saapitta maadhiri oru feeling. i think naanga itha vazhakkai podimaass solluvome..
i am interested in tryin this.
please clarify: senai kizhangu english enna peru .. i can look for it in groceries shops..
Muthu (previous comment author)
ReplyDeleteThis is not Vallaikaai podimass.
So, the next post is that. :)
Ayya vijay ithu bramhin sappadu illai ithu kerala sappadu
ReplyDeleteஇது கேரளா பதார்த்தம் தாம். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்த வரை இது பிராமின் பதார்த்தம் தாம். இப்படி நிறைய பதார்த்தங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து அடாப்ட் செய்யப்பட்டது. அவைகளைப் பற்றி ஒவொன்றாக பார்ப்போம்.
ReplyDeleteபெயர் காரணம் :
எரி (எரிப்பது) விலக்கப் பட்டது அதனால் எரி சேரி.
mmmmmmmசெய்முறை கொஞ்சம் மாறி இருக்கு, ஆனாலும் இதுவும் எரிசேரி தான். நாங்க செய்யறது வேறே மாதிரி. என் அப்பாவின் கொ.பா. பூர்வீகம் கேரளா நம்பூதிரினு சொல்வார். அதனால் ஓரளவுக்குக் கேரளமுறையும் தெரியும். என்றாலும் இதிலே கொஞ்சம் மாறுதல் இருக்கு. குக்கரில் வைத்தால் என்னதான் சேனைக்கிழங்கு என்றாலும் குழைந்து விடும். சுவையும் மாறும். அப்படியே வேக வைத்தாலே நன்கு வெந்துவிடும்.
ReplyDelete