சாம்பார் பொடி:
கொத்தமல்லி விதை (தனியா) - 250g
துவரம் பருப்பு - 50g
கடலை பருப்பு - 50g
சிவப்பு மிளகாய் வற்றல் (நன்கு காயவைத்தது) - 200 g
வெந்தயம் - 10 g
கொத்தமல்லி வெந்தயம் இரண்டையும் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
மற்றவைகள் நன்கு காய்ந்து இருக்கவேண்டும்.
மாவு திரிக்கும் மிசினில் கொடுத்து திரித்துக் கொள்ளவும்.
நல்ல மிக்சியில் கூட திரித்துக் கொள்ளலாம்.
அரைத்து விட்ட குழம்பு:
கொஞ்சமாக எண்ணெய் எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வறுத்துக் கொண்டு (same proportion ) அதனுடன் வெறும் 1-2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து 'பர பர' வென அரைத்துக் கொள்ளவும். ஒரு இழுப்பவானளியில் காய்களை (சதுரமாக நறுக்கிய உருளை, கத்திரிக்காய், அவரைக்காய், நீளமாக நறுக்கிய காரட் ) சற்று வதக்கி புளித் தண்ணீர் விட்டு (salt) நன்கு கொதித்தவுடன் (புளியின் பச்சை வாசனை போன பின் , add asafetida powder ) இந்த அரைத்த விழுதை அதன் தலையில் கொட்டி (நிறைய நேரம் கொதிக்கக் கூடாது ; தேங்காய் கொதித்தால் எண்ணெய் விட்டு taste மாறிவிடும்; சாம்பார் பொடியின் பச்சை வாசனை இருக்காது - வறுத்து விடுவதால்) ஒரு கொதி வந்தவுடன் பருப்பு சேர்த்து வழக்கம் போல அரிசி மாவு (கால் ஸ்பூன்) கரைத்து விட்டு இறக்கினால் .... அரைத்து விட்ட குழம்பு ரெடி!!
நன்றி :)
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDeleteசொந்த சமையலா, வெளுத்துக்கட்டுங்க.
ReplyDelete