பீன்ஸ் பருப்பு உசிலி
2. மிளகாய் வற்றல் - காரத்தின் அளவுக்கேற்ப.
3. பீன்ஸ்
4. உப்பு மற்றும் பெருங்காயம்
5. சூர்யகாந்தி எண்ணெய்
பருப்பு உசிலி:
பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டியது - பின் தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டியது (இந்த தண்ணீரை ரசத்திற்கு உபயோகப்படும்) - மிக்ஸியில் பருப்பு வற்றல் உப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை பர பர வென்று அரைத்துக்கொள்ள வேண்டியது (மையாக அரைக்க கூடாது) - இலுப்ப வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டியது - நன்றாக கொதித்தவுடன் அரைத்த விழுதை அதில் போட்டு வதக்க வேண்டியது (முதலில் பேஸ்ட் போல இருப்பது வதக்க வதக்க உதிர் உதிர் ஆக மாறும்) - எண்டு பாயிண்ட் நன்றாக உதிர்ந்து போதல்.
பீன்ஸை வேக வைத்து - உப்பு சேர்த்து - பருப்பு உசிலி ஐ சேர்த்துக் கொள்ள வேண்டியது - மோர் குழம்போடு சாப்பிட வேண்டியது.
பீன்ஸ்-க்கு பதிலாக கொத்தவரங்காய் அல்லது வாழைப்பூ வையும் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment