Friday, September 17, 2010

வெள்ளரிக்காய் பச்சடி

வெள்ளரிக்காயை தோல் சீவி நடுவில் உள்ள விதை பாகத்தை எடுத்துவிடுங்கள். மிச்சம் இருப்பது வெள்ளரியின் சதை மட்டுமே. சிறு துண்டுகளாக அதை வெட்டிக் கொண்டு மிக்சியில் ஓரிரு திருப்பிக் கொள்ளுங்கள். மிக்சி இல்லாதவர்கள் கத்தியால் அல்லது மற்ற சன்னமாகத் திருகும் சாமான்கள் மூலம் துருவிக் கொள்ளுங்கள். இதனுடன் உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் வெள்ளரியில் உள்ள தண்ணீர் வெளியேறிவிடும். பின்னர் அதனை வடித்துவிடவோ அல்லது விட்டுவிடவோ வசதி இருக்கும். பச்சடி நீராக ஓடாமல் இருக்கும்.

இரண்டு தக்காளி, கொஞ்சம் ஜீரகம், ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவல் இவற்றையும் அரை கப் தயிரில் அரைத்துக் கொண்டு வெள்ளரிக்காயுடன் சேர்த்துக்கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கால் ஸ்பூன் எண்ணையில் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் கொண்டு கடைசியில் கொஞ்சம் பெருங்காயம் போட்டு பச்சடியின் தலையில் சேர்க்கவும்.

கொத்தமல்லி இலைகள் இருப்பின் மிக சன்னமாக அதை அறிந்து, அழகு மற்றும் வாசனைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதார்த்தம் எடுத்துக் கொள்ளும் நேரம் இரண்டில் இருந்து மூன்று நிமிடங்கள் தான்.
Try once.

Summary :
chopped வெள்ளரி + உப்பு +
mixer of தேங்காய் துருவல் , ஜீரகம், பச்சை மிளகாய் , தக்காளி and curd
+ தாளிப்பு = வெள்ளரிப் பச்சடி.